‘ரேபிடோ பைக் டாக்ஸி’ 6 நகரங்களில் அறிமுகம்

தினமலர்  தினமலர்
‘ரேபிடோ பைக் டாக்ஸி’ 6 நகரங்களில் அறிமுகம்

பெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த, ‘ரேபிடோ’ நிறுவனம், நேர அடிப்படையில், வாடகை இரு சக்கர வாகன சேவையை, சென்னை, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட, 6 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஓலா, ஊபர்’ போன்ற வலைதள நிறுவனங்கள், தரகு கட்டண அடிப்படையில், வாடகை கார் சேவைகளை வழங்கி வருகின்றன. அதுபோல, ரேபிடோ நிறுவனம், நேர அடிப்படையில், வாடகை இரு சக்கர வாகன சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, ரேபிடோ நிறுவனர் அரவிந்த் சன்கா கூறியதாவது:நிறுவனம், வாடகை இரு சக்கர வாகன சேவையில், புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஒருவர், ரேபிடோ வலைதளத்தில், இரு சக்கர வாகன சேவைக்கு பதிவு செய்தால், 1 – 6 மணி நேரம் வரை, பயன்படுத்துவதற்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், ஒருவர், குறைந்தபட்சமாக, ஒரு மணி நேரத்தில், ஒரே வாகனம் மூலம், பல்வேறு இடங்களுக்கு சென்று, தன் பணிகளை சுலபமாக முடித்துக் கொள்ளலாம். இச்சேவையில், ஒருவரே ஓட்டுனராக வருவார் என்பதால், பயணம் பாதுகாப்பான வகையில் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை