மும்பை பங்குச் சந்தை 1,145 புள்ளிகள் வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
மும்பை பங்குச் சந்தை 1,145 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை : உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரம் காரணமாக, இந்திய பங்குச் சந்தை, நேற்று கடும் வீழ்ச்சி கண்டது.

மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 1,145 புள்ளிகள் சரிவடைந்து, 49,744.32 புள்ளிகளில் நிலை கொண்டது. அதுபோல, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 306.05 புள்ளிகள் குறைந்து, 14,675.70 புள்ளி களில் நிலை பெற்றது. பங்குச் சந்தை, தொடர்ந்து, ஐந்து வர்த்தக தினங்களாக சரிவைக் கண்டு வருகிறது. நேற்று, ரிலையன்ஸ், ரெட்டீஸ் லேப், டி.சி.எஸ்., ஆகியவை கடும் சரிவையும், ஓ.என்.ஜி.சி., எச்.டி.எப்.சி., கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்டவை விலை உயர்வையும் கண்டன.

இந்தியாவில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தால், பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டன.சீன மத்திய வங்கி, குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என, அறிவித்ததால், ஜப்பான் தவிர்த்து, ஆசியாவின் இதர பங்குச் சந்தைகள் நேற்று சரிவைக் கண்டன.

மூலக்கதை