தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்: 40% - 50% தடுப்பூசி பணிகளை தனியாருக்கு ஒதுக்க முடிவு

தினகரன்  தினகரன்
தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்: 40%  50% தடுப்பூசி பணிகளை தனியாருக்கு ஒதுக்க முடிவு

டெல்லி: நாடு முழுவதும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் தனியார் நிறுவனங்களை பெறும் அளவில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவர் செவிலியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பதிவுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தடுப்பூசி விநியோகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்களை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் 40 முதல் 50 % தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை