வார்னருக்கு ஆப்பரேஷன் * ஐ.பி.எல்., தொடரில் சந்தேகம் | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
வார்னருக்கு ஆப்பரேஷன் * ஐ.பி.எல்., தொடரில் சந்தேகம் | பெப்ரவரி 22, 2021

மெல்போர்ன்: காயத்துக்கு ஆப்பரேஷன் செய்ய இருப்பதால் வார்னர், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் டேவிட் வார்னர். கடந்த நவம்பர் மாதம் இவரது வலது தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர், முதல் டெஸ்டில் இவர் பங்கேற்கவில்லை. இதிலிருந்து சற்று மீண்ட வார்னர், கடைசி இரு டெஸ்டில் பங்கேற்ற போதும் 5, 13, 1, 48 என குறைந்த ரன்கள் தான் எடுத்தார்.

தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர, விரைவில் ஆப்பரேஷன் செய்யவுள்ளார். அடுத்த 6 முதல் 9 மாதங்கள் வரை இவர் போட்டிகளில் பங்கேற்க முடியாது. தவிர வரும் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் 60 போட்டிகள் நடக்கும். இதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் பயணம் அதிகமாக இருக்கும், காயம் பெரியதாக வாய்ப்புள்ளது.

இதனால் வரும் ஐ.பி.எல்., தொடரில் வார்னர், பங்கேற்கபது சந்தேகம் தான். முழுமையாக மீண்ட பின், இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் களமிறங்குவார் என நம்பப்படுகிறது.

மூலக்கதை