நியூசிலாந்து அசத்தல் வெற்றி * வீழ்ந்தது ஆஸி., | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
நியூசிலாந்து அசத்தல் வெற்றி * வீழ்ந்தது ஆஸி., | பெப்ரவரி 22, 2021

கிறைஸ்ட்சர்ச்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. 

கான்வே ‘99’

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (0), செய்பெர்ட் (1) ஜோடி துவக்கம் மோசமான கொடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 12 ரன்னுக்கு அவுட்டானார். பிலிப்ஸ் 20 பந்தில் 30 ரன் எடுத்தார். ஜிம்மி நீஷம் (26) சற்று உதவ, டேவன் கன்வே, பவுண்டரி மழை பொழிந்தார். 36 பந்தில் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து 20 ஓவரில் 184/5 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த போதும், கன்வே சதம் அடிக்க முடியவில்லை. இவர் 59 பந்தில் 99 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 

சொதப்பிய ‘டாப்’

கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் (1), பிலிப்பே (2), மேக்ஸ்வெல் (1), ஸ்டாய்னிஸ் (8) சாம்ஸ் (1) என வரிசையாக ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். வேட் (12), ஏகார் (23), ரிச்சர்ட்சன் (11) சற்று உதவினர். மிட்சல் மார்ஷ் அதிகபட்சம் 45 ரன்கள் எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. இஷ் சோதி 4, டிம் சவுத்தீ 2, பவுல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை