தமிழக அணி தோல்வி * ஆந்திராவிடம் வீழ்ந்தது | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
தமிழக அணி தோல்வி * ஆந்திராவிடம் வீழ்ந்தது | பெப்ரவரி 22, 2021

இந்துார்: ஆந்திர அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி தொடர் லீக் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் உள்ளூர், விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் தற்போது நடக்கிறது. இந்துாரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஆந்திரா மோதின. ‘டாஸ்’ வென்ற ஆந்திரா, பீல்டிங் தேர்வு செய்தது.

பாபா ஆறுதல்

தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த் (4), ஜெகதீசன் (11) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. சாய் கிஷோர் 29 ரன் எடுக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக் (7), பாபா அபராஜித் (3) ஏமாற்றினர். பாபா இந்திரஜித் (40), சோனு யாதவ் (37) சற்று தாக்குப்பிடித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற தமிழக அணி 41.3 ஓவரில் 176 ரன்னுக்கு சுருண்டது.

அடுத்து களமிறங்கிய ஆந்திர அணிக்கு கேப்டன் ஹனுமா விஹாரி (2) ஏமாற்றிய போதும், 29.1 ஓவரில் 181/3 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 84 பந்தில் 101 ரன்கள் எடுத்த அஷ்வின் ஹெப்பர், அரைசதம் அடித்த ரிக்கி புய் (52) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

மூலக்கதை