‘மைக்’ பிடிக்கும் கார்த்திக் | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
‘மைக்’ பிடிக்கும் கார்த்திக் | பெப்ரவரி 22, 2021

புதுடில்லி: இங்கிலாந்து தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார்

இந்திய அணி விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 35. இவரது தலைமையிலான தமிழக அணி, சமீபத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ தொடரில் கோப்பை வென்றது. 

இதனிடையே, வரும் மார்ச் 12ல் துவங்கும் இந்தியா–இங்கிலாந்து ‘டுவென்டி–20’, ஒருநாள் தொடரில், ஸ்கை ஸ்போர்ட்ஸ்(இங்கிலாந்து) சார்பில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார். இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டும் கைகோர்க்கிறார். நாசர் ஹுசைன், ஆர்தர்டன் உள்ளிட்டோரும் வர்ணயை பணியில் அசத்த உள்ளனர்.

மூலக்கதை