பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல்

தினமலர்  தினமலர்
பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல்

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது என நாசா முன்னதாகத் தெரிவித்தது. அது இரண்டு ஆண்டுகள் அங்கு சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 'பெர்சவரன்ஸ்' என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.


செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை இந்த ரோவர் தற்போது அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேமரா ஏ எனப்படும் ரோவரின் முன்புறம் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை