பெண் கணித மேதைக்கு கவுரவம்

தினமலர்  தினமலர்
பெண் கணித மேதைக்கு கவுரவம்

பெண் கணித மேதைக்கு கவுரவம்கேப் கேனவரால்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வின் முதல் கறுப்பின பெண் கணித நிபுணரான, கேத்தரின் ஜான்சனை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

கேத்தரின் ஜான்சன் உருவாக்கிய கணக்குகளை அடிப்படையாக வைத்தே, முதல் முறையாக அமெரிக்கர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.'ஹிடன் பிகர்' என்ற, 2016ல் வெளியான சினிமாவில், கேத்தரின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில், தன், 101வது வயதில் அவர் உயிரிழந்தார்.கடந்த, 1962, பிப்., 20ல், அமெரிக்காவின் ஜான் கிளென், விண்வெளிக்கு பறந்தார். அதன், 59வது ஆண்டு தினத்தில், விண்வெளியில் ஆய்வு செய்யும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்கலத்துக்கு, கேத்தரின் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை