அமெரிக்காவில் பலி 5 லட்சம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் பலி 5 லட்சம்

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்திலுள்ளது அமெரிக்கா. முதன்முதலில் ஜனவரி 2020ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டது. 4  மாதங்களிலேயே உயிர்ப்பலி 1 லட்சமாகவும், செப்டம்பரில் 2 லட்சமாகவும், டிசம்பரில் 3 லட்சமாகவும் ஆனது. இவற்றில் அதிவேகமாக ஒரு மாத இடைவெளியில் 2021 ஜனவரியில் 4 லட்சமாக உயர்ந்து, தற்போது மொத்த பலி எண்ணிக்கை 5  லட்சமாகியுள்ளது. ‘அமெரிக்காவில் கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு இது. 1918ம் ஆண்டு இன்ப்ளுயன்சா தொற்று ஏற்பட்டபோதுகூட இத்தனை பெரிய இழப்பு இல்லை’ என்று அமெரிக்க தொற்றுநோய்  சிறப்பு நிபுணரான அந்தோனி பவுசி கூறியுள்ளார்.

மூலக்கதை