ஸ்ரீசாந்த் 5 விக்கெட்: ‛லிஸ்ட் ஏ’ போட்டியில் அசத்தல் | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
ஸ்ரீசாந்த் 5 விக்கெட்: ‛லிஸ்ட் ஏ’ போட்டியில் அசத்தல் | பெப்ரவரி 22, 2021

பெங்களூரு: உ.பி., அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் கைப்பற்ற கேரளா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான ‛சி’ பிரிவு லீக் போட்டியில் கேரளா, உத்தர பிரதேசம் அணிகள் மோதின. ‛டாஸ்’ வென்ற கேரளா அணி ‛பீல்டிங்’ தேர்வு செய்தது.

உ.பி., அணிக்கு அபிஷேக் கோஸ்வாமி (54), பிரியம் கார்க் (57), அக் ஷ்தீப் நாத் (68) கைகொடுக்க, 49.4 ஓவரில் 283 ரன்களுக்கு ‛ஆல்–அவுட்’ ஆனது. கேரளா சார்பில் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கேரளா அணிக்கு ராபின் உத்தப்பா (81), கேப்டன் சச்சின் பேபி (76) நம்பிக்கை தர, 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், 7 ஆண்டு தடைவிதிக்கப்பட்டார். தடைக்கு பின் மீண்டும் போட்டிக்கு திரும்பிய இவர், ஒடிசா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் 2 விக்கெட் கைப்பற்றினார். இதுவரை 88 ‛லிஸ்ட் ஏ’ போட்டியில்  118 விக்கெட் சாய்த்துள்ளார். இதில் 2 முறை, ஒரு போட்டியில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

மூலக்கதை