இந்திய அணிக்கு உலக கோப்பை: சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை | பெப்ரவரி 22, 2021

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு உலக கோப்பை: சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை | பெப்ரவரி 22, 2021

புதுடில்லி: ‛‛சொந்த மண்ணில் இந்திய அணி ‛டுவென்டி–20’ உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது,’’ என, சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

மும்பை கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 30. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 16 போட்டியில் 4 அரைசதம் உட்பட 480 ரன்கள் குவித்தார். இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ‛டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் முதன்முறையாக தேர்வானார்.

இந்த ஆண்டு இந்தியாவின் ‛டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியது: இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதனை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். இந்திய வீரர்களின் பங்களிப்பு, ஒவ்வொரு அணிக்கு எதிராக அவர்கள் விளையாடும் விதம் போன்றவை நம்பமுடியாதது.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த பின், மற்ற அணிகளை விட இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. நானும் இந்த அணியில் இணைய இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இம்முறை சொந்த மண்ணில் இந்திய அணி ‛டுவென்டி–20’ உலக கோப்பை வெல்லும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.

மூலக்கதை