குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட அரியவகை உயிரினம்...

தினகரன்  தினகரன்
குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட அரியவகை உயிரினம்...

அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றான ஃபெரெட் என்ற விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். குளோனிங் முறையில், செம்மறி ஆடு, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது மரநாய் இனத்தை சேர்ந்த ஃபெரட் என்ற விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் ஃபெரட்டுக்கு ‘எலிசபெத் ஆன்’ என பெயரிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வில்லா என்ற ஃபெரட்டின் திசுக்களிலிருந்து ‘எலிசபெத் ஆன்’ உருவாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை