13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி, தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மேலும் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அன்று இரவு ஒரே நாளில் புதுச்சேரியில் மட்டும் 19 செ. மீ. , மழை கொட்டித் தீர்த்தது.

.

மூலக்கதை