ராஜஸ்தான் பயிற்சியாளர் விலகல் | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
ராஜஸ்தான் பயிற்சியாளர் விலகல் | பெப்ரவரி 21, 2021

புதுடில்லி: ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு பதவி விலகினார்.

ஐ.பி.எல்., தொடரின் முதல் சீசனில் கோப்பை வென்ற அணி ராஜஸ்தான். கடந்த சீசனில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கடைசி இடம் பெற்றது. இதன் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ மெக்டொனால்டு இருந்தார். சமீபத்திய ஏலத்தில் தென் ஆப்ரிக்க ‘ஆல் ரவுண்டர்’ கிறிஸ் மோரிசை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது. தற்போது ஆஸ்திரேலிய ‘டுவென்டி–20’ பயிற்சியாளராக நியூசிலாந்து சென்றுள்ள இவர், சென்னையில் நடந்த ஏலத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. 

இதையடுத்து மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் 2019ல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மெக்டொனால்டு, இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் பதவி விலகினார். இவருக்குப் பதில் சமீபத்தில் அணி இயக்குனராக நியமிக்கப்பட்ட இலங்கை அணி முன்னாள் கேப்டன் சங்ககரா, அணியை மேற்பார்வையிட உள்ளார். துணை பயிற்சியாளர் விண்டீசின் டிரிவர் பென்னியுடன் இணைந்து சங்ககரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை