மும்பையிடம் வீழ்ந்தது டில்லி: பிரித்வி ஷா சதம் | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
மும்பையிடம் வீழ்ந்தது டில்லி: பிரித்வி ஷா சதம் | பெப்ரவரி 21, 2021

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் பிரித்வி ஷா சதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடத்தப்படுகிறது. ஜெய்ப்பூரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் டில்லி, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

டில்லி அணிக்கு ஷிகர் தவான் (0), நிதிஷ் ராணா (2), லலித் யாதவ் (5) ஏமாற்றினர். டில்லி அணி, 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த ஹிம்மத் சிங் (106*), ஷிவாங்க் வஷிஷ்ட் (55) ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. டில்லி அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் தவால் குல்கர்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (8) ஏமாற்றினார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (39), சூர்யகுமார் யாதவ் (50) நம்பிக்கை தந்தனர். அபாரமாக ஆடிய பிரித்வி ஷா (105*) சதம் கடந்து வெற்றிக்கு உதவினார். மும்பை அணி 31.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெங்கால் வெற்றி

கோல்கட்டாவில் நடந்த ‘இ’ பிரிவு லீக் போட்டியில் பெங்கால் அணி (315/6, 50 ஓவர்) 70 ரன் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை (245/10, 49.4 ஓவர்) தோற்காடித்தது.

மூலக்கதை