இந்திய வீரர்கள் பயிற்சி: ஆமதாபாத் டெஸ்ட் போட்டிக்காக | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்கள் பயிற்சி: ஆமதாபாத் டெஸ்ட் போட்டிக்காக | பெப்ரவரி 21, 2021

ஆமதாபாத்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய வீரர்கள் பயிற்சியை துவக்கினர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதலிரண்டு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. அடுத்த இரு டெஸ்ட் போட்டிகள் உலகின் பெரிய ஆமதாபாத், சர்தார் படேல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் ஆமதாபாத் வந்துள்ளனர்.

மூன்றாவது டெஸ்ட் வரும் பிப். 24ல் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக நேற்று இந்திய அணியினர் மைதானத்தில் பயிற்சியை துவக்கினர். முதலில் உடற்பயிற்சி, ‘பீல்டிங்’ பயிற்சி மேற்கொண்டனர். அதன்பின், வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் விராத் கோஹ்லி, துணை கேப்டன் அஜின்கியா ரகானே, துவக்க வீரர் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட் ‘பேட்டிங்’ பயிற்சி மேற்கொண்டனர். இதேபோல மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில், மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் பந்துவீசினர். இதேபோல, 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் ‘பவுலிங்’ செய்தார். சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் பந்துகளை சுழற்றினர்.

இந்திய அணியினரை தொடர்ந்து, இங்கிலாந்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை