இளம் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து | பெப்ரவரி 21, 2021

தினமலர்  தினமலர்
இளம் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து | பெப்ரவரி 21, 2021

மும்பை: ‘டுவென்டி–20’ அணிக்கு தேர்வான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் (மார்ச் 12, 14, 16, 18, 20, இடம்: ஆமதாபாத்) கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் 19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் (மும்பை), இஷான் கிஷான் (மும்பை), ராகுல் டிவாட்டியா (ராஜஸ்தான்) ஆகியோர் புதுமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகி, பின் காயத்தால் விலகிய தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். இவர்களுக்கு, சச்சின், ஹர்பஜன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘‘இங்கிலாந்து தொடருக்கு தேர்வான சூர்யகுமார், இஷான் கிஷான், டிவாட்டியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக விளையாடுவது எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் மிகப் பெரிய கவுரவம். நீங்கள் அனைவரும் நிறைய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

ஹர்பஜன்: இறுதியாக இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்துவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள்.

இர்பான் பதான்: நீங்கள் காத்திருந்தது முடிந்துவிட்டது சூர்யகுமார். வாழ்த்துக்கள். இதேபோல இஷான் கிஷான், டிவாட்டியாவும் இந்திய அணியில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

ஆர்.பி. சிங்: இந்திய அணிக்கு முதன்முறையாக தேர்வான சூர்யகுமார், இஷான் கிஷான், டிவாட்டியா ஆகியோரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

மூலக்கதை