காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, காவல் துறை தலைவர் விஜய் குமார் உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்ந்த கட்டிடங்களில் நின்றுகொண்டு, பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுற்றி வளைத்தனர்.
ஆனால், தலைமறைவான நிலையில் அனந்த்நாக் பகுதியில் இருந்து, மூன்று ஏ. கே. -56 துப்பாக்கிகள், இரண்டு சீன துப்பாக்கிகள்,  இரண்டு சீன கையெறி குண்டுகள், ஒரு தொலைநோக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.இருந்தும், தீவிரவாதிகளை தேடும்பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நகர் சந்தையில் போலீஸ் வாகனத்தை தீவிரவாதிகள் தாக்கினர்.

இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். மேலும், பாகத் பர்ஜுல்லா பகுதியில், ஏ. கே. 47 துப்பாக்கியுடன் சுற்றிய இந்த தீவிரவாதிகள், பகிரங்கமாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை