ரூ6,941 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ6,941 கோடி மதிப்பில் காவிரிவைகைகுண்டாறு திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை: காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட துவக்க விழா புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில் இன்று காலை நடைபெற்றது. இத்திட்டத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்லை நாட்டினார்.
காவிரியில் அதிகமாக வரும் உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கப்பதை தடுத்து அந்த நீரை ஆக்கப்பூர்வமாக விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த ஏதுவாக அறிவிக்கப்பட்டதே காவிரிகுண்டாறுவைகை இணைப்பு திட்டமாகும்.

இந்த திட்டம் 2008ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கரூர் மாயனூர் கதவணை துவங்கி வெள்ளாறு, வைகை வரை இணைக்கும் திட்டமாகும்.இது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டமாகும். இத்திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118. 45 கி. மீ. , இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 118. 45 கி. மீ. முதல் 228. 145 கி. மீ.

வரை என 109. 695 கி. மீ. தூரமும், மூன்றாம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 228. 145 கி. மீ.

முதல் 262. 19 கி. மீ. வரை என 34. 045 கி. மீ தூரம் என மொத்தம் 262. 19 கி. மீ.

நீளம் வரை இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக மாயனூர் அருகே காவிரி ஆற்றின் குறுகே அப்போது கதவணை கட்டப்பட்டது.ஆனால் அதோடு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம், சட்டமன்ற தேர்தலை மீண்டும் துவங்கப்படுகிறது.

இதன் மொத்த மதிப்பீடு தொகை ₹6,941 கோடி ஆகும். காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இத்திட்டத்தை செயல்படுத்த இரு கட்டங்களாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசாணை பெறப்பட்டுள்ளது.

இதன்படி கரூர் மாவட்டத்தில் 4. 10 கி. மீ வரை ரூ. 171 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி மாவட்டத்தில் 1. 83 கி. மீ நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3. 525 கி. மீ நீளமும் என மொத்தம் 5. 355 கி. மீ நீளத்திற்கு ரூ. 160 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், காவிரிவைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு இன்று காலை புதுக்கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவிற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

முன்னதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கே. டி. ராஜேந்திரபாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர், க. பாஸ்கரன், எஸ்.

வளர்மதி, அரசின் தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசகன், கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

விழா முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் புறப்பட்டார். கரூரில் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியி–்ல் நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, அண்ணா, எம்ஜிஆர்.

ஜெயலலிதா சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 4. 30 மணியளவில் வாங்கலில் நடைபெறும் உழவன் திருவிழா கண்காட்சியில், விவசாய கடன் தள்ளுபடி செய்த முதல்வருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாமக்கல் பிரசாரத்திற்கு செல்கிறார்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அடிக்கல்
காவிரிவைகைகுண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும்.

ஆனால் இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாத நிலையில் காவிரிவைகைகுண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

.

மூலக்கதை