தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ224 உயர்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ224 உயர்ந்தது

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்கள் குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 35,712க்கும், 17ம் தேதி ரூ. 35,152க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,385க்கும், பவுன் ரூ. 35,080க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,340க்கும், பவுனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு பவுன் ரூ. 34,720க்கும் விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலை சற்று அதிகரித்தது.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ. 37 குறைந்து ஒரு கிராம் ரூ. 4348க்கும், பவுனுக்கு ரூ. 296 குறைந்து ஒரு பவுன் ரூ. 34,784க்கும் விற்கப்பட்டது. பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

தொடர்ச்சியாக 4 நாட்கள் பவுன் ரூ. 928 அளவுக்கு குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ. 28 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 4,376க்கும், பவுனுக்கு ரூ. 224 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 35,008க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை திடீர் உயர்வு நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை