சென்னையில் இன்று ஐபிஎல் ஏலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் இன்று ஐபிஎல் ஏலம்

சென்னை: இந்த ஆண்டுக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள  வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் முதல் முறையாக சென்னையில் இன்று நடக்கிறது.    ஐபிஎல் போட்டியின் 14வது தொடர் இந்த  ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப 14வது தொடருக்கான தேவையான வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்ய வசதியாக ஏலம் இன்று நடக்கிறது.

அதிலும்  ஐபிஎல்  ஏலம் முதல்முறையாக சென்னையில் நடந்தது.
  இந்த தொடரில் விளையாட உள்ள 8 அணிகளும் ஏலத்தில் பங்கேற்க வசதியாக கடந்த மாதம் 139 வீரர்களை தக்க வைத்தன. மேலும் 57 வீரர்களை விடுவித்தன.   எனவே ஏலத்தில் பங்கேற்க விடுவிக்கப்பட்ட 57 வீரர்கள் உட்பட 1,114 உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் இருந்து 292 பேரை ஏலத்தில் கலந்துக் கொள்ள தகுதியான வீரர்களாக ஐபிஎல் அறிவித்தது. அவர்களில்  164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 சார்பு நாடுகளில் வீரர்களும் இடம் பிடித்திருந்தனர் . வீரர்களின் அடிப்படை விலையாக குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.    அதிகபட்ச விலைக்கு உரிய 10  வீரர்களில்  ஜேசன் ராய், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், எலியாம் பிளாங்கட்(இங்கிலாந்து), ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல்(ஆஸ்திரேலியா),  ஷாகில் அல் அசன்(வங்கதேசம) ஆகியோருடன், இந்திய வீரர்களில் கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகியோரும்  இடம் பிடித்து உள்ளனர்.

அடுத்து 1. 5 கோடி ரூபாய் பட்டியலில் உள்ள டேவிட் மில்லர், டாம் கரன்,  அலேக்ஸ் கேரி, மோர்னி மார்கல்,  என 12 பேரும் வெளிநாட்டு வீரர்கள்தான்.

மேலும் ஒரு கோடி ரூபாய் ஏலப் பட்டியலில் 11 பேரில் உமேஷ் யாதவ், ஹனுமா விகாரி மட்டும் இந்திய வீரர்கள். ஏலம் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏலத்தில் ஒவ்வொரு அணி சார்பிலும்  பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் நேற்று 2வது கட்ட கொரோனா சோதனைக்கு முடிவு அடிப்படையில் அவர்கள் இன்றைய ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

அணிகள் வாரியாக கையிருப்பும், தேவையான வீரர்களின் எண்ணிக்கையும்
*சென்னை சூப்பர் கிங்ஸ்:
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 19
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 7
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
 இந்திய வீரர்கள்: 5
வெளிநாட்டு வீரர்: 1
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 19. 90கோடி
* டெல்லி கேபிடல்ஸ்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 17
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 5
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
இந்திய வீரர்கள்: 5
வெளிநாட்டு வீரர்கள்: 3
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 13. 40கோடி
* பஞ்சாப் கிங்ஸ்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 16
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 3
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
 இந்திய வீரர்கள்: 4
வெளிநாட்டு வீரர்: 5
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 53. 20கோடி
*கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 17
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 6
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
 இந்திய வீரர்கள்: 6
வெளிநாட்டு வீரர்கள்: 2
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 10. 75கோடி
* மும்பை இந்தியன்ஸ்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 18
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 4
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
 இந்திய வீரர்கள்: 3
வெளிநாட்டு வீரர்கள்: 4
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 15. 35கோடி
*ராஜஸ்தான் ராயல்ஸ்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 16
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 5
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
 இந்திய வீரர்கள்: 6
வெளிநாட்டு வீரர்கள்: 3
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 37. 85கோடி
* ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூர்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 14
அவர்களில் வெளிநாட்டு வீரர்கள்: 5
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
இந்திய வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்: 3
கையிருப்பு ஏலத் தொகை: ரூ. 35. 40கோடி
* சன்ரைசர்ஸ் ஐதராபாத்
இப்போது அணியில் உள்ள வீரர்கள் : 22
அவர்களில்வெளிநாட்டு வீரர்கள்: 7
இன்றைய ஏலம் மூலம் எடுக்கப்படும்
இந்திய வீரர்கள்: 2
வெளிநாட்டு வீரர்: 1
கையிருப்பு ஏலத்தொகை: ரூ. 10. 75கோடி

ஏலத்தில் தமிழக காளைகள்
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடப்பு சாம்பியனான தமிழக அணியில் உள்ள இளம் காளைகள் அருண் கார்த்திக், மணிமாறன் சித்தார்த், எம். முகமது, பாபா அபராஜித், ஜி. பெரியசாமி, ஷாருக்கான்,  செழியன் ஹரிநிஷாந்த்  ஆகியோர் குறைந்தபட்ச அடிப்படை விலையான 20லட்ச ரூபாய் பட்டியலில் உள்ளனர்.


.

மூலக்கதை