தங்கம்விலை இன்றும் சவரனுக்கு ₹112 குறைந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம்விலை இன்றும் சவரனுக்கு ₹112 குறைந்தது

சென்னை: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ. 112 குறைந்து, ஒரு சவரன் 35,040க்கு விற்பனையானது. கொரோனா பரவலை தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை அடுத்தடுத்து படிப்படியாக குறைந்தது.

பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ெஜட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது.


 இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் சவரன் ரூ. 1,360 அளவுக்கு குறைந்தது. 9 மாதத்திற்கு பிறகு இந்த அளவுக்கு விலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 6ம் தேதி சவரன் ரூ. 35,752, 8ம்தேதி ரூ. 35,720, 9ம் தேதி ரூ. 36,296, 10ம் தேதி ரூ. 36,176க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரு கிராம் ரூ. 4,464க்கும், சவரன் ரூ. 35,712க்கும் விற்கப்பட்டது.    

இந்த சூழ்நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.

கிராமுக்கு ரூ. 48 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,416க்கும், சவரனுக்கு ரூ. 384 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,328க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

அதாவது, கிராமுக்கு ரூ. 14 குறைந்து ஒரு கிராம் ரூ. 4380க்கும், சவரனுக்கு ரூ. 35,040க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை