கொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிப்பு:போக்குவரத்து அமைச்சகம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிப்பு:போக்குவரத்து அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: கொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டல் முறைப்படி மே 25ம் தேதி முதல் விமான சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது.

விமான பயணத்தின் நேரம் அடிப்படையில், 7 பிரிவுகளாக பிரித்து, அவற்றுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உயர்த்தியது.

10 சதவீதம் முதல் 30 சதவீதம்வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் கட்டண உயர்வு, மார்ச் 31ம் தேதி வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று கூறியுள்ளது.

அதன்படி, 40 நிமிடத்துக்கு குறைவான பயணத்துக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து 2,200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ.

7,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 9,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3,300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 11,700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3,900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 13 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 ஆயிரமாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 16,900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், 150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 6,100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 20,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 7,200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 24,200 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3ம் தேதியில் இருந்து, 80 சதவீத விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த அனுமதி, மார்ச் 31ம் தேதிவரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை