மாநிலங்களவை காங். தலைவராக கார்கே நியமனம்: வெங்கையா நாயுடுவுக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலங்களவை காங். தலைவராக கார்கே நியமனம்: வெங்கையா நாயுடுவுக்கு கடிதம்

புதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் 1990ம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாக  பொறுப்பேற்றார்.

1996ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றது. 1996  முதல் 2006 வரை ஜம்மு காஷ்மீரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சில காலம்  ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த அவர் 2009ம் ஆண்டு மீண்டும்  மாநிலங்களை உறுப்பினரார்.

2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை  தலைவராகவும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டார்.

இந்நிலையில் வரும் 15ம் தேதி மாநிலங்களவை பொறுப்பிலிருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெறுகிறார். அதனால், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த லிஸ்டில் 2014 முதல் 2019ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை துணை தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய சிங் ஆகியோர் இருந்தனர்.

குலாம்நபி ஆசாத்திற்கு அடுத்து அந்த பதவிக்கு யார் வருவார் என்பதை சோனியா காந்தி பிப்ரவரி 15க்கு பிறகே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராகவும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை