உ.பி-யில் மீண்டும் அரங்கேறிய ‘விகாஷ் துபே பார்ட் - 2’ : மதுபான கும்பலால் போலீஸ்காரர் அடித்துக் கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பியில் மீண்டும் அரங்கேறிய ‘விகாஷ் துபே பார்ட்  2’ : மதுபான கும்பலால் போலீஸ்காரர் அடித்துக் கொலை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ‘விகாஷ் துபே பார்ட் - 2’ என்ற அடிப்படையில் மதுபான கும்பலால் போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் போலீசாரால் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் நேற்று மாலை, மதுபான மாஃபியா கும்பலை சேர்ந்த ஒருவனை தேடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரோகா அசோக் பால் மற்றும் கான்ஸ்டபிள் தேவேந்திர குமார் சிங் ஆகியோர் சென்றனர்.

அப்போது மதுபான மாஃபியா கும்பல், தேவேந்திர குமார் சிங்கை அடித்துக் கொன்றது. அதேபோல் அந்த கும்பல் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் தரோகா அசோக் பால் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சம்பவத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை குற்றவாளிகளை தேடி தனிப்படை போலீசார் காஸ்கஞ்ச் பகுதியை சுற்றிவளைத்தனர்.

போலீசார் நடத்திய என்கவுண்டரில், மதுபான மாஃபியா கும்பல் தலைவர் மோட்டியின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து சித்தபுரா காவல் நிலைய பொறுப்பாளர் பிரேம்பால் சிங் கூறுகையில், ‘இன்று அதிகாலை போலீசாருக்கும், மதுபான மாஃபியா கும்பலுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது.

போலீசை பார்த்த மாஃபியா கும்பல், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதற்கு பதிலளிக்கும் விதமாக காவல்துறையும் செயல்பட்டது. இந்த என்கவுண்டரில், மதுபான மாஃபியா கும்பல் தலைவன் மோட்டியின் சகோதரர் எல்கர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று மதுபான மாஃபியா கும்பல் இருக்கும் இடத்திற்குச் சென்ற நாகலா திமர் கிராமத்தில் சித்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் சென்றனர்.

அவர்கள் அந்த கும்பலால் தாக்கப்பட்டனர். போலீஸ்காரர்களின் சீருடையை கிழித்து எறிந்தனர்.

ஒருகட்டத்தில் அவர்களை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். எங்களுக்கு தகவல் கிடைத்தபின் சம்பவ இடத்தில் ெசன்று பார்த்த போது,  இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் வெவ்வேறு இடங்களில் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

இச்சம்பவத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து என்கவுன்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றார்.

கடந்த 2016ம் ஆண்டில் அலிகஞ்ச் மற்றும் எட்டா பகுதிகளில் விஷ சாராயம் குடித்து 48 பேர் இறந்தனர். மெயின்பூரியிலிருந்து அலிகஞ்ச் மற்றும் எட்டாவின் பிற பகுதிகளுக்கு விஷம் கலந்த சாராயம் சப்ளை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாநில அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கையால் மதுபான தயாரிப்பு குறைந்து காணப்பட்டது. ஆனால் சட்டவிரோத மற்றும் மதுபான வர்த்தகம் ெதாடர்ந்து நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, போலீசாருக்கும் மதுபான கும்பலுக்கும் அடிக்கடி மோதல்களும் ஏற்படுவதுண்டு. தற்போது மதுபான கும்பலை தேடி போன போலீஸ்காரர்களில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத கும்பலால் போலீசார் தாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு ஜூலை 2ம் தேதி நள்ளிரவு கான்பூரில் இருந்த பிரபல ரவுடி விகாஸ் துபே என்பவனை தேடி போலீசார் ெசன்ற போது, அந்த கும்பலால் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின், பிரதான குற்றவாளியான விகாஷ் துபே, போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவன் மட்டுமின்றி இவ்வழக்கில் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை ேபான்று இன்று அதிகாலை சம்பவமும் நடந்துள்ளதால் ‘விகாஷ் துபே பார்ட் - 2’ என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை