விஜய் சங்கருக்கு திருமணம் | ஜனவரி 28, 2021

தினமலர்  தினமலர்
விஜய் சங்கருக்கு திருமணம் | ஜனவரி 28, 2021

சென்னை: இந்திய அணி வீரர் விஜய் சங்கர்–வைஷாலி ஜோடிக்கு திருமணம் நடந்தது.

இந்திய அணி ‘ஆல் ரவுண்டர்’ விஜய் சங்கர் 30. தமிழகத்தை சேர்ந்தவர். 2018ல் இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ (கொழும்பு) போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த 2019 உலக கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் போட்டியில் (பாகிஸ்தான்) முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தினார் அசத்தினார். இதுவரை 12 ஒருநாள், 9 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 

ஐ.பி.எல்., தொடரில்  ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இவருக்கும், வைஷாலிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதை ஐதராபாத் அணி நிர்வாகம் தனது ‘டுவிட்டர்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டது. 

அதில்,‘உங்களது திருமண வாழ்க்கை இனிமையாக அமையட்டும். இந்த இனிமையான நாளில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,’ என தெரிவித்துள்ளது.

மூலக்கதை