இங்கி அணியை வரவேற்கிறேன்: சுந்தர்பிச்சை ட்விட்

தினகரன்  தினகரன்
இங்கி அணியை வரவேற்கிறேன்: சுந்தர்பிச்சை ட்விட்

இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்பு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5 - 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாவதுப் போட்டியும் சொன்னையில் பிப்ரவரி 13 - 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மைதானத்தில் பயிற்சியை தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி சென்னை வருகை குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டது. அதனை பகிர்ந்த சுந்தர் பிச்சை “என்னுடைய சொந்த ஊருக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து அணியை வரவேற்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை