அணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்

தினமலர்  தினமலர்
அணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்

மாஸ்கோ:அமெரிக்கா -- ரஷ்யா இடையிலான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம், அடுத்த மாதம் காலாவதியாகிறது. இதை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க, ரஷ்யா விருப்பம் தெரிவித்தது. ஆனால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இதற்கு தயக்கம் காட்டினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக, கடந்த, 20ல் பதவியேற்ற ஜோ பைடன், நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புடினை, டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தை மேலும், ஐந்து ஆண்டுக்கு நீட்டிப்பது பற்றி, புடின் பேசினார். இதற்கு பைடன் சம்மதித்தார்.

இதையடுத்து, அமெரிக்காவுடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தை, மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க, ரஷ்ய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது.

மூலக்கதை