வேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்

தினமலர்  தினமலர்
வேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்

வாஷிங்டன் :''இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும்,'' என, சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர், கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள், இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, கீதா கோபிநாத் கூறியதாவது:விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பனை செய்ய, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் வழி செய்கின்றன.


அவை, விவசாயிகளுக்கு பரவலான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன. மொத்த விலை சந்தை மட்டுமின்றி, வரி ஏதும் செலுத்தாமல், வெளிச் சந்தைகளில் விளை பொருட்களை விற்க உதவுகின்றன.ஒரு முறையில் இருந்து, வேறு முறைக்கு மாறுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, இயல்பாக ஏற்படும் சில பிரச்னைகளை தவிர்க்க முடியாது. அத்தகைய இடர்பாடுகளால், அடித்தட்டு விவசாயிகள் பாதிக்கக் கூடாது. அவர்களுக்கான சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும். இது குறித்து நடைபெற்று வரும் பேச்சில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை