டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை

தினமலர்  தினமலர்
டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இருந்த, டொனால்டு டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேறுவதற்கு சாத்தியமில்லை என்பதால், தீர்மானம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என, தெரிகிறது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்றார். கடந்த 6-ம் தேதி நடந்த பார்லி.,யின் கூட்டுக் கூட்டத்தின் போது டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டிவிட்டதாக, டிரம்ப் மீது, பார்லி.,யில் கண்டன தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய அந்தத் தீர்மானம், தற்போது, செனட் சபை பிப்., 8ம் தேதி அதன் மீது விவாதம் நடக்க உள்ளது.

மூலக்கதை