நிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..!

தினமலர்  தினமலர்
நிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..!

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியுப் டிரம்பின் சேனலை முடக்கி உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கு டிவிட்டர் நிர்வாகத்தால் முன்னதாக நிரந்தரமாக முடக்கப்பட்டது.


ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக எலக்ட்டோரல் காலேஜால் அங்கீகரிக்கப்பட்டபோது வெள்ளை மாளிகையில் வரலாறு காணாத அளவுக்கு டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட சில சர்ச்சைக்குரிய டுவீடுகளை நீக்கும்படி டிவிட்டர் நிறுவனம் எச்சரித்திருந்தது.

ஜோ பைடனின் வெற்றியில் போலி வாக்காளர்களின் பங்கு உள்ளது என்று டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டு பதிவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதும் அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டது.

இதேபோல பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் அவரது பதிவுகள் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டன. தற்போது 30 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட டிரம்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் அதிகரிக்கும் விமர்சனங்கள் காரணமாக முடக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்கள் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை நீக்கியதை அடுத்து டிரம்பின் யூடியூப் பக்கம் மூடக்கப்படாமல் இருந்ததால் அவரது எதிர்ப்பாளர்கள் கூகுள் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தனர். இதனை அடுத்து யூடியூப் இந்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனின் குடும்பம் குற்றப்பின்னணி கொண்டது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னதாக டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்தார். இதனை அடுத்து அதே தலைப்பில் அவர் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதேபோல சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பலவற்றை டிரம்ப் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுகொண்டு இருந்தார். இதற்கு பார்வையாளர்களும் குவிந்து வந்தனர். தற்போது எதிர்ப்பு அதிகரிப்பதன் காரணமாக அவரது யூடியூப் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை