கடைசி பந்தில் சோலன்கி சிக்சர் * அரையிறுதியில் பரோடா | ஜனவரி 27, 2021

தினமலர்  தினமலர்
கடைசி பந்தில் சோலன்கி சிக்சர் * அரையிறுதியில் பரோடா | ஜனவரி 27, 2021

ஆமதாபாத்: சையது முஷ்தாக் அலி டிராபி காலிறுதியின் கடைசி பந்தில் சோலன்கி சிக்சர் அடிக்க, பரோடா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவில் சையது முஷ்தாக் அலி ‘டுவென்டி–20’ உள்ளூர் தொடர் நடக்கிறது. ‘நாக் அவுட்’ போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஆமதாபாத் மைதானத்தில் நடக்கின்றன.

தமிழகம், பஞ்சாப் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று நடந்த காலிறுதியில் பரோடா, ஹரியானா மோதின. ‘டாஸ்’ வென்ற பரோடா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹரியானா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

சோலன்கி அபாரம்

அடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு கேப்டன் தேவ்தர் (43), ஸ்மித் படேல் (21) கைகொடுத்தனர். விஷ்ணு சோலன்கி அரைசதம் எட்டினார். கடைசி ஓவரில் பரோடா வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டன.

சுமித் குமார் வீசிய முதல் மூன்று பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 3 பந்தில் 15 ரன் தேவைப்பட்டன. 4வது பந்தில் சிக்சர் அடித்தசோலன்கி, 5வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் சோலன்கி (71), சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பரோடா அணி 20 ஓவரில் 150/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை