கோஹ்லி ‘நம்பர்–1’: ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஜனவரி 27, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘நம்பர்–1’: ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஜனவரி 27, 2021

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிரண்டு இடங்களை முறையே இந்தியாவின் கோஹ்லி, ரோகித் சர்மா தக்கவைத்துக் கொண்டனர்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 870 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் (89, 63 ரன்) அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காத இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, 842 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அடுத்த மூன்று இடங்களில் முறையே பாகிஸ்தானின் பாபர் ஆசம் (837), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (818), ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் (791) தொடர்கின்றனர்.

 

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 700 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களை முறையே நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் (722 புள்ளி), ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (708) தக்கவைத்துக் கொண்டனர். விண்டீசுக்கு எதிராக வேகத்தில் அசத்திய வங்கதேசத்தின் முஸ்தபிஜுர் ரஹ்மான் (658 புள்ளி), 19வது இடத்தில் இருந்து 8வது இடம் பிடித்தார். மற்றொரு வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன், 13வது இடத்துக்கு முன்னேறினார்.

மூலக்கதை