கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை

பெங்களூரு: மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை பலமாக உள்ளதாக சமூகவளத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, மாநில அரசின் சார்பில் மார்ச் மாதம் தாக்கல் செய்ய வரும் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில், சமூகநலத்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். சமூகநலத்துறையின் கீழ் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் உள்பட பல பிரிவுகள் உள்ளது. உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளது. மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் துறையாகவும் உள்ளதால், வழக்கமாக ஒதுக்கீடு செய்யும் நிதியை காட்டிலும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும்படி முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன்.மாநிலத்தில் முழு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. சில அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைகள் மாற்றம் செய்யும்போது, அதிருப்தி எழுவது இயல்பான ஒன்றுதான். அதிருப்தியில் உள்ளவர்களை முதல்வர் எடியூரப்பா சமாதானம் செய்து வருகிறார். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் ெகாண்டு பலமான அமைச்சரவையை முதல்வர் எடியூரப்பா அமைத்துள்ளார். அமைச்சரவையில் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்ற அதிகாரம் எப்படி முதல்வருக்கு உள்ளதோ, அதேபோல் எந்த துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற அதிகாரமும் அவருக்குள்ளது’’ என்றார்.

மூலக்கதை