சென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சென்னைமைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

பெங்களூரு: எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாளை முதல் (29-ம் தேதி) மைசூருவிற்கு தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அறிக்கை: ``சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வண்டி எண் 06021 தினமும் இரவு 9.15 மணிக்கு மைசூருவிற்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 6.40 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தை வந்தடையும்.  இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலஜாபேட்டை, காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, ஒயிட்பில்ட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு ஈஸ்ட், பெங்களூரு கண்டன்மென்ட், கே.எஸ்.ஆர்.பெங்களூரு, கெங்கேரி, பிடதி, ராம்நகர், சென்னபட்ணா, மத்தூர், மண்டியா, பாண்டவபுரா ரயில் நிலையங்களில் நின்று மைசூரு வந்து சேரும். அதே போல் மைசூருவிலிருந்து 30-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.40 மணிக்கு எம்.ஜி.ஆர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். அதே போல் கொச்சிவேலியிருந்து மைசூருவிற்கு இயங்கி வரும் பண்டிகை கால சிறப்பு ரயில் வண்டி எண் 06316 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மைசூருவிலிருந்து இயங்கி வந்த மைசூரு-கொச்சிவேலி வண்டி எண் 06315 ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கோயம்புத்தூரிலிருந்து நிஜாமுதீன் வரை இயக்கி வந்த சிறப்பு வாராந்திர ரயில் எண் 06077 அடுத்த மாதம் 7-ம் தேதி வரையும், நிஜாமுதினிலிருந்து கோயம்புத்தூர் வரை இயங்கி வரும் வண்டி எண் 06078 மார்ச் 31-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை