மாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்

தினகரன்  தினகரன்
மாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்

மைசூரு: மைசூருவில் எம்எல்ஏ சாரா மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலின் போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து எந்த முடியும் எடுக்கவில்லை. தேசிய கட்சிகள் இரண்டும் நமக்கு எதிரான கட்சிகள். இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை கூட்டணி தொடர்பாக அறிவிக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் மேயர்கள், சில காங்கிரசார் நடந்து கொண்ட விதம் குறித்து நமது கவனத்திற்கு வந்துள்ளது. நகரத்தின் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் நல்லவிதமாக நடந்து கொண்டு வருகின்றனர். இரண்டு, மூன்று பேர் செய்யும் தவறுக்கு கட்சியை குற்றம் சொல்வது சரியில்லை. இடஒதுக்கீடு அறிவித்த பின்னர் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்’’ என்றார்.

மூலக்கதை