இரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி

தினகரன்  தினகரன்
இரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி

சித்ரதுர்கா: வேகமாக வந்த இரு கார்கள் மோதியக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. மாவட்டத்தில் முளகல்மூரு தாலுகா, கொம்மனபட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலை 15ல் ெபங்களூருவில் இருந்து சித்ரதுர்காவுக்கு சென்று கொண்டிருந்த காரும், முளகல்மூருவில் இருந்து சித்ரதுர்காவுக்கு வந்து கொண்டிருந்த காரும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் வனஜாக்‌ஷி (36) மற்றும் மஹேந்திரா (50) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் இரு கார்களில் இருந்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக முளகால்மூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முளகல்மூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை