துபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
துபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

பெங்களூரு: துபாயில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த 3 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றியுள்ளனர். கர்நாடகத்தில் உள்ள மங்களூரு மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் வாயிலாக வெளி நாடுகளில் இருந்து தங்கம் கட்டிகள், போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது வருகிறது. அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விமான பயணிகளையும் சோதனை நடத்திய பின்னரே வெளியே அனுப்பி வைத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மங்களூரு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிகுழு அமைத்த அதிகாரிகள், ஒவ்வொரு பயணிகளிடமும் சோதனை நடத்தினர். அதில் துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்கிய அப்துல் ரஷீத் என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சோதனையில் அவரிடம் இருந்து பேஸ்ட் வடிவில் 0.658 கிராம் தங்கத்தை கடத்த முயற்சித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.33.29 லட்சம் என்று கூறப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் இதை கைப்பற்றினர். இதற்கு அடுத்தப்படியாக துபாயில் இருந்து தனியார் விமான மூலம் மங்களூரு வந்திறங்கிய இருவேறு பயணிகளை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் ரூ.57 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 119 கிராம் தங்கம் இருப்பது உறுதியானது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இந்த இருவேறுசம்பவம் தொடர்பாக மங்களூரு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது; இருவேறு விமானங்களில் பயணித்த 3 பேரை கைது செய்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ரூ.57 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 119 கிராம் தங்கம் இருப்பது உறுதியானது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்

மூலக்கதை