நடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?.. காங். கேள்வி

தினகரன்  தினகரன்
நடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?.. காங். கேள்வி

டெல்லி: டெல்லி செங்கோட்டை முற்றுகையில் பங்கேற்ற நடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தீப் சித்து, பிரதமர் மோடியுடன் இருக்கும் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். செங்கோட்டை முற்றுகையில் நடிகர் தீப் சித்து முக்கிய பங்கு வகித்ததாக சம்யுக்த் கிசான் மோர்சா அமைப்பும் குற்றம் சாட்டியது. விவசாயிகள் போராட்டத்திற்குள் பாஜகவினர் ஊருருவியதாக தமிழக விவசாயிகள் சங்கமும் குற்றம் சாட்டியிருந்தது.

மூலக்கதை