வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லி : டெல்லியில் குடியரசு தினத்தில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணி வெற்றி பெற்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை டெல்லி முற்றுகை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளை போலீசார் கலைத்தனர். போராட்டத்தின் உச்சமாக செங்கோட்டையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் தங்களின் சீக்கிய கொடிகளை நட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது இடங்களுக்கு திரும்பிய விவசாயிகள், செங்கோட்டையில் போராட்டம் நடத்தியது பெரும் சாதனை என்று குறிப்பிட்டனர்.போராட்டத்தை ஒடுக்க முயன்ற மத்திய அரசுக்கு பாடம் கற்பித்ததாக அவர்கள் கூறினர். 63வது நாளாக டெல்லியில் நீடிக்கும் முற்றுகை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

மூலக்கதை