வருங்கால தலைமுறையினர் தங்கவயல் வரலாற்றை அறிந்து கொள்ள ஜான் டைலருக்கு சிலை: தமிழ் சங்க தலைவர் பேச்சு

தினகரன்  தினகரன்
வருங்கால தலைமுறையினர் தங்கவயல் வரலாற்றை அறிந்து கொள்ள ஜான் டைலருக்கு சிலை: தமிழ் சங்க தலைவர் பேச்சு

தங்கவயல்: தங்கவயல் உருவான வரலாற்றை வருங்கால தலைமுறையும் அறிந்து கொள்ள ஜான் டைலரின் சிலை தங்கவயல் தமிழ் சங்கத்தில் அமைக்கப்படுகிறது என்று சங்க தலைவர் சு.கலையரசன் பேசினார். தங்கவயலில் தங்க சுரங்க தொழிலை ஆரம்பித்து நடத்திய ஆங்கிலேயர் ஜான் டைலரின் உருவ சிலையை அமைக்க தமிழ் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தங்கவயல் தமிழ் சங்கத்தில் நேற்று ஜான் டைலரின் உருவ சிலை  அமைப்பதற்கான பூமி பூஜை நடத்த பட்டது. இந்து மத பூஜாரி, கிறிஸ்துவ மத பாஸ்டர், மற்றும் இஸ்லாமிய இமாம் ஆகியோர் மும்மதங்களின் வேதங்களையும், படித்தனர். விழாவில் தமிழ் சங்க தலைவர் சு.கலையரசன் தலைமை தாங்கி பேசும் போது, தங்கவயல் நகரம் உருவாக காரணமாக இருந்த ஜான் டைலரின் சிலையை தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே அமைக்க தமிழ் சங்கம் முடிவு செய்தது. தங்கவயல் நகரம் உருவான வரலாற்றை வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஜான் டைலர் சிலை நிறுவப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் தொழிற்சங்க தலைவர் பாண்டுரங்கன், பேராசிரியர் கிருஷ்ணகுமார், தியாக தீபம் சுப்ரமணியம், கமல் முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை