அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பு நாள்: டி.எஸ்.எஸ். வாகன ஊர்வலம்

தினகரன்  தினகரன்
அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பு நாள்: டி.எஸ்.எஸ். வாகன ஊர்வலம்

தங்கவயல்: அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டு அமல்படுத்திய நாளை கொண்டாடும் வகையில் தங்கவயலில் டிஎஸ்எஸ் சார்பில் வாகன ஊர்வலம் நடந்தது. 1950-ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசும், மக்களும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்திய நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை கடைபிடிக்கும் விதமாக தலித் சங்கர்ஷ சமிதி சங்கத்தின் சார்பில் தங்கயவலில் வாகன ஊர்வலம் நடந்தது.  தலித் சங்கர்ஷ சமிதியின் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் என்.நடராஜன் தலைமையில் ராபர்ட்சன்பேட்டையில் இருந்து இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. ஊர்வலமாக டாக்டர் அம்பேத்கார் பூங்காவிற்கு வந்து அங்கு அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆர்.குமார். இ.ரவிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை