60 லட்சம் 'டோஸ்' தடுப்பு மருந்து: 9 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி

தினமலர்  தினமலர்
60 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து: 9 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி


நியூயார்க் :'ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா., சபையில், இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த கருத்தரங்கில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு பேசியதாவது:
உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எங்களின் தடுப்பு மருந்துகளை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க, இந்தியா கடமைப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக, இந்திய தயாரித்துள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மூலக்கதை