யாருக்கு பயப்படுகிறது அரசு: கமல் கேள்வி

தினமலர்  தினமலர்
யாருக்கு பயப்படுகிறது அரசு: கமல் கேள்வி

சென்னை : 'இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்வில் உள்ள கமலின் டுவிட்டர் பதிவு:கிராம சபை கூட்டங்கள் நடத்தக்கூடாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, 'கோவிட்'டை காரணம் காட்டியுள்ளனர். குடியரசு நாள் கொண்டாடலாம்; ஜெயலலிதா விழா நடத்தலாம்; கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில், இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?

நாட்டு வளர்ச்சியில் மக்களின் பங்கு, தேர்தல் வந்தால் ஓட்டு போடுவதோடு சுருங்கி விட்டது. தங்களுக்கு வேண்டியதை பெறவும், வேண்டாததை தவிர்க்கவும், மக்களுக்கு இருக்கும் உரிமையை செயல்படுத்தும் பாதையில் நகர்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை