சுப்மன் கில்லுக்கு நெருக்கடி: காம்பிர் எச்சரிக்கை | ஜனவரி 26, 2021

தினமலர்  தினமலர்
சுப்மன் கில்லுக்கு நெருக்கடி: காம்பிர் எச்சரிக்கை | ஜனவரி 26, 2021

புதுடில்லி: ‛‛சுப்மன் கில் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அவருக்கு தேவையில்லாத நெருக்கடி தரக்கூடாது,’’ என, காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் துவக்க வீரர் சுப்மன் கில் 21. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், சிட்னி (50), பிரிஸ்பேன் (91) டெஸ்டில் அரைசதமடித்து இந்திய அணி கோப்பை வெல்ல உதவினார். துவக்க வீரராக அசத்திய இவர், 3 டெஸ்டில், 259 ரன்கள் குவித்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியது: சுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் இணைந்து துவக்கம் தர வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வதேச தொடரை சிறப்பாக துவக்கிய இவரிடம் நிறைய திறமைகள் உள்ளன. இதற்காக அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தேவையிலாமல் நெருக்கடி தரக்கூடாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் மிக கடினமானது. ‛பார்மை’ தக்கவைத்துக் கொள்வது சவாலானது. துவக்க வீரராக தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள அவருக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை