தோனியை சந்தித்தார் ரிஷாப் பன்ட் | ஜனவரி 26, 2021

தினமலர்  தினமலர்
தோனியை சந்தித்தார் ரிஷாப் பன்ட் | ஜனவரி 26, 2021

புதுடில்லி: இந்திய வீரர் ரிஷாப் பன்ட், முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்தார்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 274 ரன்கள் குவித்த இவர், சிட்னி டெஸ்டின் 2வது இன்னிங்சில் 97 ரன் விளாசி, இந்திய அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டார். தொடர்ந்து அசத்திய இவர், பிரிஸ்பேன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 89 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இந்திய அணி 2–1 என, ‛பார்டர்–கவாஸ்கர்’ கோப்பை வென்றது.

சமீபத்தில் நாடு திரும்பிய ரிஷாப் பன்ட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்சி ஆகியோரை நேரில் சந்தித்தார். இதற்கான போட்டோவை தோனியின் மனைவி சாக்சி, தனது ‛இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இதுகுறித்து ரிஷாப் பன்ட் கூறுகையில், ‛‛பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் களமிறங்கினோம். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. ஒவ்வொரு டெஸ்டிலும் வெற்றி பெறவே விரும்புகிறேன். ‛டிரா’ செய்வது இரண்டாவது ‛சாய்ஸ்’ தான். சிட்னி டெஸ்டில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த போதிலும், இன்னும் சிறிது நேரம் விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்,’’ என்றார்.

மூலக்கதை