பேர்ஸ்டோவ் முடிவு சரியா * மைக்கேல் வான் கோபம் | ஜனவரி 26, 2021

தினமலர்  தினமலர்
பேர்ஸ்டோவ் முடிவு சரியா * மைக்கேல் வான் கோபம் | ஜனவரி 26, 2021

லண்டன்: ‘‘இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில், பேர்ஸ்டோவுக்கு ஓய்வு தருவது என்பது பைத்தியகாரத்தனமான முடிவு,’’ என மைக்கேல் வான் தெரிவித்தார். 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரு டெஸ்ட் வரும் பிப். 5–9, பிப். 13–17ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிற்கு முதல் இரு போட்டியில் ஓய்வு தரப்பட்டது. மற்றொரு விக்கெட் கீப்பர் பட்லரும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின் நாடு திரும்புகிறார். இதுகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி:

இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் நிதானம், கட்டுப்பாடுடன் சிறப்பாக விளையாடும் இங்கிலாந்தின் ‘டாப்–3’ வீரர்களில் பேர்ஸ்டோவும் ஒருவர். உலகின் சிறந்த அணியான இந்தியாவுக்கு எதிராக, அதன் சொந்தமண்ணில், முதல் இரு டெஸ்டில் இருந்து இவருக்கு ஓய்வு கொடுப்பது என்ற முடிவு தவறானது.

இவ்வாறு மைக்கேல் வான் அதில் தெரிவித்தார்.

இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில்,‘‘தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளதால் தான் ஓய்வு எடுக்கிறேன். இந்த நேரத்தை விட்டால் பிறகு ஓய்வு கிடைக்காது,’’ என்றார்.

மூலக்கதை