இந்திய தேசத்துக்கு ‘சல்யூட்’ * நடராஜன் வாழ்த்து | ஜனவரி 26, 2021

தினமலர்  தினமலர்
இந்திய தேசத்துக்கு ‘சல்யூட்’ * நடராஜன் வாழ்த்து | ஜனவரி 26, 2021

சென்னை: இந்திய குடியரசு தினத்திற்கு நடராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் 72வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர், தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜன், பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றிக்குப் பின் தேசியக் கொடியுடன் மைதானத்தை வலம் வந்த வீடியோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டார். 

இதில்,‘நமது மாபெரும் இந்திய தேசத்திற்கு ஆயிரக்கணக்கான வணக்கங்கள் (‘சல்யூட்’). வரும் காலத்தில் இன்னும் வளமாகவும், சிறந்ததாகவும் மாறட்டும். இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்,’ என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிட்ட செய்தியில்,‘ ஒவ்வொரு முறை எனது ஜெர்சியை அணிந்து தேசத்திற்காக களமிறங்கும் போதும், மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது,’ என்றார்.

கொடி கவுரவம்

மும்பை போலீஸ் ஜிம்கானாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்த, இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில்,‘மும்பை போலீசார் தேசியக் கொடி ஏற்ற என்னை அழைத்தது கவுரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் தன்னலமற்ற முறையில் சேவை செய்யும் எங்கள் காவல்துறைக்கு நன்றி,’ என்றார். 

மூலக்கதை