வெள்ளை மாளிகையில் பைடனின் நாய்கள்

தினமலர்  தினமலர்
வெள்ளை மாளிகையில் பைடனின் நாய்கள்

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபர், ஜோ பைடனின் குடும்பத்தார், அரசு இல்லமான வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ள நிலையில், அவருடைய, செல்ல பிராணிகளான, இரண்டு நாய்களும், குடி புகுந்துள்ளன.

அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் சமீபத்தில் பதவியேற்றார். இதையடுத்து, மனைவி மற்றும் குடும்பத்தாருடன் அவர் வெள்ளை மாளிகையில் குடி புகுந்துள்ளார்.தான் வளர்த்து வரும், இரண்டு, 'ஜெர்மன் ஷெபர்ட்' ரக நாய்களையும், வெள்ளை மாளிகைக்கு அழைத்து வர உள்ளதாக, பைடன் கூறியிருந்தார்.

தற்போது, சாம்ப் மற்றும் மேஜர் என, பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும், வெள்ளை மாளிகைக்கு குடி புகுந்துள்ளன. இதில், மேஜர் என்ற நாயை, பைடன், டலாவரேயில் உள்ள பிராணிகள் மையத்தில் இருந்து, 2018ல், தத்தெடுத்தார். சாம்ப், 2008ல் பைடன் குடும்பத்தில் இணைந்தது.

'தெருவில் சுற்றித் திரிந்த மேஜர், தற்போது அதிபர் மாளிகையில் காலடி எடுத்து வைத்துள்ளது' என, அதை மீட்டு வளர்த்த, டலாவரேயில் உள்ள பிராணிகள் மையம் கூறியுள்ளது. பைடன் வளர்த்து வரும், பூனையும் விரைவில் வெள்ளை மாளிகைக்கு வர உள்ளது.

மூலக்கதை